4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை

உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி யூனியன், ஆட்டோமொபைல் சம்மேளனம் மற்றும் நெட்பால் சம்மேளனம் ஆகியவற்றின் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கும் அது தொடர்பான தேர்தலை நடத்துவதற்கும் உரிய அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....