இறந்த உடலை எரிக்க வேண்டாம் புதைக்கத் தாருங்கள்! என்ற உரிமைக் குரல்கள் ஓய்ந்து போய் “எரித்து விடுங்கள் ஆனால் எரித்து எஞ்சிய சாம்பளை தாருங்கள்” என்ற உரிமைப் போராட்டங்கள் உருவாகியுள்ளது.

இப்பொழுது அரசும் சுகாதாரத் துறையும், அடக்கம் செய்ய உடலை கொடுக்கலாமா? இல்லையா? என்ற தலைப்பை தூக்கியெறிந்து விட்டு சாம்பலை கொடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கத் தொடங்கியுள்ளது .

இனி முஸ்லிம்களின் கோரிக்கையை மதித்து அவர்களுடைய உரிமையை விட்டுக் கொடுத்தோம் என்ற பெயரில் ஒரு பையில் எரித்து எஞ்சிய சாம்பலைக் கொடுக்கும் சம்பவம் நடைபெறப் போகிறது.

இதற்குள் கெஞ்சி போராடிப் பெற்ற உரிமையை (?) சாப்பலை என்ன செய்வது என்ற வாதப் பிரதி வாதங்களும் முட்டுக் கொடுக்கும் முயற்சிகளும் முஸ்லிம் அறிஞர்களிடையே சூடுபிடித்துள்ளது.

சரி கேட்டு விட்டோம். தந்தும் விட்டார்கள். கிடைத்த சாம்பலை என்ன செய்வது? அதை புதைத்தால் போச்சு.என்று ஹாறூன் (ஸஹ்வி) அவரது முகப்புத்தகத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி