கொழும்பு நகர வீதியில் மதுபோதையில் மோட்டார்

சைக்கிளைச் செலுத்திச்  சென்ற பொலிஸ் பரிசோதகர் ஒருவர்  ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட நபர் ஒருவரைத்  தாக்கிக் காயப்படுத்திவிட்டு முச்சக்கரவண்டியுடன் மோதியதாக பேலியகொட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் சந்தேகத்தின்  பேரில்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (29) தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே  இவ்வாறு அவர் நடந்து கொண்டுள்ளதாகப் பேலியகொட தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சட்ட வைத்தியர் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது வைத்தியர் சந்தேக நபரை பரிசோதித்து அவரின் வாயிலிருந்து மது வாசனை வீசியதாக மருத்துவ அறிக்கை சமர்பித்தார் என  பொலிஸார் தெரிவித்தனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி