ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின்

பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார   ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

“தற்போது, ​​நாட்டின் கடனை மறுசீரமைத்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சலுகைகளைப் பெற்று சர்வதேச முதலீடுகள் மற்றும் உறவுகளை மேம்படுத்தும் பயணத்தை நாம் காண முடிகிறது.

சர்வதேச ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான அறிவும் திறமையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருப்பதை நாம் அறிவோம்.

எனவே தேர்தலை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அத்தியாவசியமான விடயமாக மாறியுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று உறுதிப்படுத்திய பிறகே அதைச் செய்ய வேண்டும். இது மிகவும் நடைமுறை ஜனநாயக முறைப்படி செய்யப்பட வேண்டும்."

தேர்தல்  மழுங்கடிக்கப்படுகிறது என்று கூறாமல் மற்றைய அரசியல் கட்சிகளும் இதை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்தலை நடத்துவது சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் தேவையற்ற பண விரயத்தை ஏற்படுத்துவதோடு, நாட்டை  காலியான  நிலையில் இருந்து மீட்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளுக்கு அதிக ஆதரவைப் பெறும் திறனையும் இழக்க நேரிடும் என்று பொதுச் செயலாளர் கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய கூட்டணியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்,

இதேவேளை, மக்களும் நாட்டின் அரசியல் தலைவர்களும் செய்ய வேண்டியது எதிர்காலத்தில் இந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைப்பதே ஆகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி