நாட்டில் உள்ள நாய்கள் கணக்கெடுப்பு அடுத்த இரண்டு

மாதங்களில் நடத்தப்படும் என சுகாதார அமைச்சின் விசர்நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கீழ் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான அடிப்படை திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

நாட்டில் சுமார் 300,000 நாய்கள் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை வளர்ப்பு நாய்கள் என்றும் ரேபிஸ் தடுப்பு பிரிவு கூறுகிறது

தற்போது, ​​இந்த நாட்டில் நாய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்படுகிறது.

நாட்டுச் சட்டத்தின்படி நாய்களைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் தடுப்பூசி மற்றும் கருத்தடை மூலம் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது எனவும் விசர்நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடுஞ்சாலைகளில் தெருநாய்களுக்கு உணவளிப்பதை குறைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....