சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 3 நாட்களில் 300,000க்கும்

அதிகமான வாடிக்கையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி  மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில்  இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்விநியோகத்தை சீரமைக்க மேலதிக  ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சார பாவனையாளர்கள் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி அனுப்பி மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க முடியும் என  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி