ராஜகிரிய ஒபேசேகரபுர அருணோதய மாவத்தையில்
ஆலயம் ஒன்றை நடத்தி வந்த 'தேவால சமரி' என்ற பெண் 26 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (20) கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த நபரின் பயணப் பையில் காணப்பட்ட 171 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 'தேவால சமரி' அருணோதய மாவத்தை, ஒபேசேகரபுர பகுதியில் உள்ள வீட்டின் ஒரு பகுதியில் சில காலமாக போதைப்பொருள் விநியோகம் செய்து வந்துள்ளார்.