எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

தெமோதரை, நெதர்வில் தோட்டத்தில் நேற்று  (20) இரு குழ்க்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது; இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக பகை இருந்து வந்துள்ளது.  சம்பவ தினம் இரவு இருதரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. 

இதன்போது கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தபடும் கனரக ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக 38 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெமோதரை கிராமிய  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதத்தை பொலிஸார் கைபற்றியுள்ளனர். 

இது தொடர்பில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....