பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி
தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியில் வகிக்கும் பதவிகள் மற்றும் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதையும் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (21) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.