ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்க்ஷ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இன்று (07) நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
 
ஜனாதிபதிக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி