வங்குரோத்து நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரஜைகள்

ஆலோசனைக் குழுக்களை நியமிக்கப் போகின்றனர். தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் செய்வதே இதனால் நாடப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

இதற்காக 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபா வீதம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக 3410 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. நாட்டில் உள்ள பாடசாலைகளில் திறன் வகுப்புகள் இல்லாத போது, இவ்வளவு பணம் விரயமாகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 173 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்  கொழும்பு, கெஸ்பேவ, மகுலுதுவ புதிய மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு  நேற்ற (4)  ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலையின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுக்களுக்கு ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் வழங்கி வைத்தார்.

இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 3100 திறன் வகுப்பறைகளை நிறுவிருக்கலாம். வங்குரோத்தான நாடு 100 பில்லியன் டொலர் கடனை எட்டியுள்ள வேளையில் இவ்வாறான பண விரயம் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

யார் அனுமதித்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசில் இந்தப் பணம் கல்விக்கு ஒதுக்கப்படும். இந்த விடயங்களில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

அதேபோல், நமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டொலருக்கு இருந்த செலவை VRS ஊடாக மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 18.50 டொலர் வீதம் விசாக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான வெளிநாட்டவர் இலங்கைக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வாறு வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து ஈட்டும் இலட்சக்கணக்கான டொலர்களை வெளிநாடுகளுக்கு விசா வழங்குவதற்காக அரசாங்கம் செலவளிக்கிறது. 25 இலட்சம் வெளிநாட்டவர்கள் வருகை தந்தால், வருடாந்தம் 46 மில்லியன் டொலர்கள் இவ்வாறு செலுத்த வேண்டி ஏற்படும் என எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்தப் பணத்தில் 12,200 திறன்  வகுப்பறைகளை நிறுவியிருக்கலாம், இது அரசாங்கத்தின் தூர நோக்கமற்ற தீர்மானமாகும். இது முட்டாள்தனமான, பயனற்ற செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி