ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும்

ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் கூடிய ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கான அரசியல் குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் குழுவில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, அநுர பிரியதர்ஷன  யாப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக பசில் ராஜபக்க்ஷவுடன் ஜனாதிபதியும் அமைச்சர்களும் நடத்திய விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி