Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம்

T

The Leader Desk

டிசம்பர் 11, 2022 • 2:33 AM

மொட்டுவின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சுக்களை வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்காலிக அமைச்சரவையை 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றியவுடன் மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டது.
  • நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் அமைச்சரவையை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அமைச்சுக்களை வழங்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்காலிக அமைச்சரவையை 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நிறைவேற்றியவுடன் மறுசீரமைக்க எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணிகளினால் புதிய அமைச்சரவை நியமனம் பிற்போடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் அமைச்சரவையை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியராச்சி, விமலவீர திஸாநாயக்க, காமினி லொகுகே, எஸ்.எம்.சந்திரசேன, சரத் வீரசேகர மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அநாவசியமானது.

அரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் உட்பட பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தியுள்ள நிலையில் அமைச்சரவையை விஸ்தரிப்பது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...