Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இலங்கையில் கடும் குளிர்; இரு குழந்தைகள் பலி; குழந்தைகள் தொடர்பில் அவசர அறிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 11, 2022 • 2:03 AM

இலங்கையில் கடும் குளிர்; இரு குழந்தைகள் பலி; குழந்தைகள் தொடர்பில் அவசர அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக, சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
  • அத்தகைய குழந்தைகளுக்கு, நன்றாக உடுத்தி, தொப்பி மற்றும் இரண்டு காலுறைகளை அணிவியுங்கள்.
  • இந்த இரண்டு குழந்தைகளும் (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

இந்நிலையில், பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக, சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைநல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பில் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா விளக்கியுள்ளார்.

"குழந்தைகளுக்கு குளிர் அதிகமாக இருக்கும் போது பல நோய்கள் வரலாம். குறிப்பாக சளியால் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகும். அதனால், இந்த நாட்களில் குழந்தைகள் வெளியே சென்றால், நன்றாக உடை அணிந்து, தொப்பி போட்டு, இரண்டு காலுறைகளை அணியுங்கள். இல்லையெனில், சளி ஆரம்பித்தால், காய்ச்சல் எளிதில் பரவும்.

"தூசி நிறைந்த இடத்தில் இருந்தால், முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். எடை குறைந்த மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு இந்த குளிர் அவ்வளவு நல்லதல்ல. அத்தகைய குழந்தைகளுக்கு, நன்றாக உடுத்தி, தொப்பி மற்றும் இரண்டு காலுறைகளை அணிவியுங்கள்.

“இரண்டு கைகளிலும் இரண்டு சொக்ஸ் போட்டு போர்த்தி விடுங்கள். குழந்தைகளின் உடல் வெப்பநிலை குறையும் போது நோய்வாய்ப்படலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையை பாதித்துள்ள அதிக குளிருடனான வானிலையினால் கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் – ராஜாஎல பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் – பேராறு பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு குழந்தைகளும் (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு, மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் நிலவும் கடும் குளிரான வானிலை காரணமாக சிறு பிள்ளைகளுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் ஏனைய நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோர்களிடம் விசேட மருத்துவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...