ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறுவதற்கான முயற்சி வெற்றியளிக்காது எனத் தான் நம்புகின்றார் என்று

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பினர் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் 113 எம்.பிக்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம். இது சவாலுக்குரிய விடயம். எனவே, அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன்.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி ஐக்கியமாகவே முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி