Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

ஹபரணையில் 11 விபசாரிகள் கைது!

T

The Leader Desk

ஜூலை 5, 2024 • 4:05 AM

ஹபரணையில் 11 விபசாரிகள் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு முகாமையாளர்கள் மற்றும் 11 விபசாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
  • கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அநுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு நான்கு முகாமையாளர்கள் மற்றும் 11 விபசாரிகளும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

ஹிங்குராக்கொட நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் நடவடிக்கை உத்தரவுகளை பெற்றதன் பின்னர் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.பண்டார தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் மொனராகலை, சிகிரியா, கம்பஹா, மஹியங்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
திம்புலாகல தலுகானை, ஹபரணை, களனி, மொனராகலை, பூனானி, அநுராதபுரம் மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 19, 27, 33, 47, 33, 48 வயதுடைய பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த முகாமையாளர்கள் விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு குறைந்த பணத்தை கொடுத்து அதிக பணம் சம்பாதித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த மசாஜ் நிலையங்கள் நீண்டகாலமாக இயங்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...