இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவாக இருந்தாலும், கனடாவுக்கு அது தேவையே இல்லை. கனடாவைச் சேர்ந்த சில

ஊடகங்கள், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக, அநுரகுமாரவையே தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அநுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ஊடகச் செய்திகளில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அநுரவுக்கு, இந்தியாவும் ராஜதந்திர சந்திப்பை வழங்கியது, இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொள்ளப்படுவார் என சிலர் நினைக்கின்றார்களா எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை முன்வைத்தாலும், சஜித் பிரேமதாஸவுக்கு இன்னும் இந்திய விஜயத்துக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. ‘இந்நாட்களில், எங்கள் நாட்டில் தேர்தல் நடக்கிறது. அது முடிந்ததும், மே மாதத்தில் பார்ப்போம்” என்று, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறாராம்.

அந்தக் கதைகள் எதுவாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தற்போது மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், ஊடக விளையாட்டு, சஜித் மற்றும் அநுரவுக்கு இடையிலேயே காணப்படுகிறது. அவர்கள் இருவரையும் அப்படியே விட்டுவிட்டு, ராஜபக்ஷ – திலீத் தரப்பை. சிங்கள, பௌத்த உரிமைகளுக்காக அடித்துக்கொள்ள விட்டு, ரணில் தற்போது வடக்கு, கிழக்குக்கு களமிறங்கியிருக்கிறார். ஓரிரு தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, ரணிலின் அடுத்த டார்கெட், மலையகமாக இருக்கிறது. சாகலவை இந்தியாவுக்கு அனுப்பக் காரணமும் அதுதானாம்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் பலத்தைக் காண்பித்து, ஐமசவின் பகுதியொன்றைப் பிரித்தெடுப்பதுதான் ரணிலின் ப்ளானாக இருக்கின்றது. நமக்குக் கிடைத்த தகவல்களின்படி, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரை, ரணில் அண்மையில் சந்தித்திருக்கிறாராம். அதுவும் தனிமையில். அந்தச் சந்திப்பு, மிகவும் முக்கியத்துவமிக்க சந்திப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. “நீங்கள் ராஜித்த தரப்பை அழையுங்கள். வெற்றி பெறுவோம் என்பதைக் காட்டுங்கள். அதன் பின்னர், நாங்கள் அனைவரும் வருகிறோம்” என்று, அந்தத் தமிழ் எம்பி தெரிவித்துள்ளார் என்றுதான் தெரியவருகிறது.

அந்தக் கதைகளின் உண்மை, பொய் எதுவானாலும், தான் உண்மையாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, அந்த எம்பியிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதாவது, இம்முறையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க, வித்தியாசமான முறையில் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். தலைவருக்கு இது பெரும் தீர்மானமிக்க வாய்ப்பாக அமைந்துள்ளதால், தனக்குத் தெரிந்த அனைத்து விளையாட்டுக்களையும் விளையாட ஆரம்பித்திருக்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி