சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு

இன்றையதினம் (21) இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, வெளிநாடுகளுக்கு பயணம் செய்த ஆளும் கட்சி உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் இன்று 21ஆம் திகதி காலைக்குள் நாட்டிற்குள் வரவேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று 21ஆம் திகதி நடைபெறவுள்ளமையாலேயே கட்சி இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அமைச்சர் பந்துல குணவர்தன,அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,மனுஷ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி , நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இதில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி