கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற

உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்பையடுத்து, தாம் உடனடியாக கோப் குழுவிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கோப் குழுவிலிருந்து இன்று வரை 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி