குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோகிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை

அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்திற்காக 10 கிலோக்கிராம் நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு படிமுறைகளை மேற்கொண்டுள்ளது.

அடையாளங் காணப்பட்ட குறைந்த வருமானங் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இவ்வாண்டிலும் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோக்கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

01.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி