நாட்டில் கொரோனா வைரஸினால் இரண்டாவது மரணம் நிகழ்ந்த போது நான் பேசியது இனவாத அர்த்தத்திலோ அல்லது மற்ற இனங்களை கேவலப்படுத்துவதோ அல்ல என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனது கருத்தை சிங்கள ஊடகங்கள் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் தான் பேசியது எவ்வித இனவாத அர்த்தத்திலும் அல்ல என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டும் இதுதான் இலங்கையிலும் உலகத்திலும் இருந்து வருகின்ற பொதுவான விடயமாகும். கொரோனாவினால் இறந்து போன இரண்டாவது நபரை எரித்தது இவ்வளவு காலமும் நடைமுறைப்படுத்தி வந்த சட்டத்தை மீறியது மட்டுமல்லாமல்  அது முஸ்லிம் மக்கள் மனதில் வேறொரு விதமான கருத்தாடலை ஏற்படுத்தும் என்பதையே கூறி இருந்தேன்.

வைரஸால் இறந்த ஒருவரை எரிக்கத்தான் வேண்டும் என்ற சட்டம் உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை

ஆனால் இலங்கையில் நடந்தது அப்படி அல்ல அதை முறைப்படி செய்திருக்க முடியும் எனது பேச்சில் எந்த இனவாத கருத்துக்களும் இல்லை என்றார்

30ம் திகதி நள்ளிரவு இறந்தவரின் உடல் நீர் கொழும்பு பொது மயானத்தில் எரிக்கப்பட்டது.

மரணச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறிய போதும் அது அப்படி நடக்கவில்லை.அவரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பவில்லை.

இவர் கடந்த 11ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தார் கடந்த 29 ம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு 30ம்  திகதி நள்ளிரவு இறந்ததாக தகவல் கிடைக்கின்றது அவரது இறுதிக்கிரியைகள் யாருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது இதையே நான் சுட்டிக் காட்டினேன் இதையே இனவாத கருத்துக்கள் என சிங்கள ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன இது நான் பிரதிநித்துவப்படுத்தும் சமூகத்தின் நிலை அதையே  சொன்னேன் இது இனவாதமல்ல.

கொரோனா வைரஸினால் நீர்கொழும்பில் மரணித்தவரின் கதை!

வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் இறுதிச் சடங்கின் போது இருவர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் என்று அரசு சொன்னது ஆனால் அப்படி நடக்க வில்லை.

எனது தந்தை இந்தியாவிலோ ஜேர்மனியிலோ இருந்து வரவில்லை பெப்ரவரி 28ம் திகதி துபாயில் இருந்து வந்த அவரது சகோதரரின் வீட்டுக்கு சென்று வந்தார். பின் மார்ச் 08ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தார் எனது தந்தை மார்ச் மாதம் 29ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் 30ம் திகதி அவர் மரணித்ததாக சமூக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது அதன் பின்னர் அரசு அறிவித்தது போல் 08 அடிக்கு குழிவெட்டி நாம் தந்தையின் இறுதிக்கிரியைகளை செய்ய நாங்கள் ஆயத்தமாக இருந்தோம் ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்புக்கிடைக்கவில்லை எங்களின் குடும்பத்திற்கு தந்தையை நல்லடக்கம் செய்ய முடியாமல் போய்விட்டது இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது நாங்கள் யாரையும் குறைகூறவில்லை என அவரது மகன் தெரிவித்தார்.

இப்போது எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளது அவர் கடைசி வரைக்கும் நல்லதொரு சமூக அமைப்பை விரும்பினார்.

ஆனால் எனது தந்தையின் இறுதி கிரியையில் நாங்கள் எதிர்பார்த்ததுபோல் அல்லாமல் எங்களுக்கு தெரியாமல் தந்தையின் உடலை எரித்துவிட்டர்கள்.

கொரோனா வைரஸினால் மரணிக்கும் முஸ்லிம்களின் நல்லடக்கம் பற்றி ஜமிய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

கொரோனா வைரஸினால் மரணித்த முஸ்லிம்களின் இறந்த உடலை அரச அதிகாரிகளின் வேண்டுகோளுக்கினங்க இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என ஜமிய்யதுல் உலமா சபை அரசாங்கத்தை கேட்டுள்ளது.

கொரோனா வைரசினால் மரணித்தவரை அடக்கம் செய்ய 08 அடிக்கு குழிவெட்ட வேண்டும்.

அடக்கும் முறை மையித்தை வுழு அல்லது தயமும் செய்து அடக்க வேண்டும். என்று ஜமிய்யதுல் உலமா சபை குறிப்பிட்டுள்ளது.

யா அல்லாஹ் இப்படியான மரணங்களில் இருந்து எங்கள் அனைவரையும் காப்பாற்றுவாயாக என்று  ஜமிய்யதுல் உலமா சபை பிரார்த்தணை செய்துள்ளது.  

  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி