உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பை பாதுகாக்கும் ஆனால் இலங்கையில் எட்டுப்பேரைப்படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது இதுவே இலங்கையின் நிலை என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

யாழ் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன் சுனில் ரத்னாயக்கவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (26) வியாழக்கிழமை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

இது குறித்து மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்

உலகின் ஏனைய நாடுகள் இரானுவத்திற்கு அவமதிப்பையும் இழிவையும் ஏற்ற்படுத்திய குற்றவாளிகளைத்தண்டிப்பதன் ஊடாக தமது இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கின்றன.

ஆனால் இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் ஏழுபேரையும் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வளங்கப்படுகின்றது இதுதான் இலங்கையின் நிலைமை என்று மங்கள சமரவீர கூரியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி