தற்போதைய நிலைமையின் அடிப்படையில் பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்று மஹிந்த தேசப்பிரிய தெரித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள தினம் கொரோனா வைரஸை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணியின் ஆலோசனையின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் செல்லும் வரையில் தேர்தல் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் ஒத்திவைக்கப்படுவது எவரது தேவையின் அடிப்படையிலும் அல்ல என்றும் முழுமையாக வைரஸின் காரணமாகவே தேர்தலை ஒத்திவைக்கவேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்பு மனுக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

2000 ரூபா பணத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு செல்வதற்கு முடியும் என்று சில வேட்பாளர்கள் சிந்தித்த போதிலும் ஆகக் கூடிய வகையில் இரு மாவட்டத்துக்காக 5 சதவீத வாக்கு வீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் சில மாவட்டங்களுக்காக 50 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் கிடைத்திருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி