Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கொழும்பு, கேகாலை, பதுளையில் காற்று மாசுபாடு தொடர் அதிகரிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 10, 2022 • 11:48 AM

கொழும்பு, கேகாலை, பதுளையில் காற்று மாசுபாடு தொடர் அதிகரிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரும்பாலான நகர்ப்புறங்களில் சாதாரண காற்றோட்டம் இருப்பதாகக் காட்டுகிறது.
  • எவ்வாறாயினும், அமெரிக்க காற்றுத் தரச் சுட்டெண்ணின் படி, 03 பிரதேசங்களில் 150க்கும் அதிகமான காற்று நிலை இன்னமும் காணப்படுவதாக அந்த அமைப்பின் சுற்றாடல் திணைக்களப் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
  • அதன்படி, கொழும்பின் பெறுமதி 191, புத்தளத்தின் பெறுமதி 169, கேகாலையின் பெறுமதி 155ஆகக் காணப்படுகிறது.
  • ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் குருநாகல் 106, கண்டி 126, எம்பிலிப்பிட்டிய 131, களுத்துறை 146, இரத்தினபுரி 114 என பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

பெரும்பாலான நகர்ப்புறங்களில் சாதாரண காற்றோட்டம் இருப்பதாகக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், அமெரிக்க காற்றுத் தரச் சுட்டெண்ணின் படி, 03 பிரதேசங்களில் 150க்கும் அதிகமான காற்று நிலை இன்னமும் காணப்படுவதாக அந்த அமைப்பின் சுற்றாடல் திணைக்களப் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பின் பெறுமதி 191, புத்தளத்தின் பெறுமதி 169, கேகாலையின் பெறுமதி 155ஆகக் காணப்படுகிறது.

ஏனைய பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் குருநாகல் 106, கண்டி 126, எம்பிலிப்பிட்டிய 131, களுத்துறை 146, இரத்தினபுரி 114 என பதிவாகியுள்ளது. சர்வதேச தரவுகளின்படி, 101 மற்றும் 200 க்கு இடையிலான மதிப்பு வளிமண்டலத்தில் மோசமான நிலைமையாகக் கருதப்படுகிறது.

திருகோணமலை 43, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் 46, வவுனியா 49, பொலன்னறுவை 54, யாழ்ப்பாணம் 63 என இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நுவரெலியாவில் 51, ஹம்பாந்தோட்டையில் 94 மற்றும் காலியில் 97 உள்ளன. எனினும், திருகோணமலை 43, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் 46, வவுனியா 49, பொலன்னறுவை 54, யாழ்ப்பாணம் 63 என இன்று காலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நுவரெலியாவில் 51, ஹம்பாந்தோட்டையில் 94 மற்றும் காலியில் 97 உள்ளன.

வளி மாசடைவு சாதாரண மட்டத்தில் காணப்படுவதால் இன்று பாதகமான சுகாதார நிலைமை இல்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். அந்த நிலை அடுத்த சில நாட்களில் தொடரும் என அந்த அமைப்பு எதிர்பார்க்கிறது.

இந்தியா உள்ளிட்ட இலங்கைக்கு அண்மித்த நாடுகளின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் தாக்கம் தீவை பாதிப்பதாக கடந்த வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. அதன்படி, அன்றிரவு தீவின் பல பகுதிகளில் குளிரான காலநிலை நிலவியது.

தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்றைய தினத்தை விட நாட்டின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

இதன்படி, இன்று முதல் வளி மாசு நிலை வழமையாக இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...