எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு வேற்புமனு கையளிக்கப்படும் தினம் நெருங்கி வருவதால் சி.சு. கட்சிக்கும் மொட்டுக் கட்சிக்கும் இடையில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் இந்த நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நேற்று (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலையிட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மொட்டுச் சின்னத்தில் போட்டி இடுவதற்கு சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சில மாவட்டங்களில் கைச் சின்னத்தில் போட்டி இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சில இடங்களில் கைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக  கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (17 ) சுதந்திரக் கட்சியின்  ஒரு குழுவினர் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை அவரது வீட்டில் சந்திக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அறியவருகின்றது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி