புதிய கொரோனா வைரஸ் (COVID 19) இலங்கையில் பரவிக்கொண்டு செல்வதால் நாட்டை மூடி விடுமாறு பலரும் யோசனை முன்வைத்துள்ளனர். மார்ச் 18 நள்ளிரவுடன் அனைத்து விமானங்களும் இலங்கையில் தரையிறங்குவது தற்காளிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வேளையில் நாட்டை சில நாட்களுக்கு மூடி வைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகள் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் இப்படி ஒரு தீர்மானத்தை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இப்படி நாட்டை மூடி குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று GMOA கேட்டிருந்தது இதனை பரிசீலித்து வருவதாக அறியக்கிடைக்கின்றது.

நாங்கள் ஒரு யோசனையை முன்வைக்கின்றோம் ஜனாதிபதி நாட்டை மூடி அவசரகால நிலைமையை ஒரு வாரத்திற்கு அமுல்படுத்தினால் இந்த விடுமுறையின் போது நோய் தோற்று எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் இவ்வாறு நாட்டில் உள்ள பல்வேறுபட்ட ஊழியர் சங்க செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி