Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

100 ரூபாவை திருடிய குற்றத்துக்காக மகனின் கையில் சூடு வைத்த தந்தை: வாழைச்சேனையில் சம்பவம்!

T

The Leader Desk

ஜூலை 16, 2024 • 7:26 PM

100 ரூபாவை திருடிய குற்றத்துக்காக மகனின் கையில் சூடு வைத்த தந்தை: வாழைச்சேனையில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருடினான் என்ற குற்றத்துக்காக தந்தையினால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
  • இந்நிலையில், செவ்வாய்க்கழமை பாடசாலையில் மாணவன் கவலையாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.
  • வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் தனது தந்தையின் நூறு ரூபா பணத்தை திருடி செலவிட்டார் என்ற குற்றத்துக்காகவே தகப்பனால் இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளான்.
எழுத்து அளவு:

திருடினான் என்ற குற்றத்துக்காக தந்தையினால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவை சேரந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன்  ஒருவன் தனது தந்தையின் நூறு ரூபா பணத்தை  திருடி செலவிட்டார் என்ற குற்றத்துக்காகவே தகப்பனால்  இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் அடுத்தநாள் பாடசாலைக்கு செல்ல முடியாது என்றும் தனக்கு கை வலிப்பதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்கு செல்லாவிட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.

இந்நிலையில், செவ்வாய்க்கழமை பாடசாலையில் மாணவன் கவலையாக இருந்த நிலையில் வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்த போது மாணவன் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.

மாணவனின் நிலையை அறிந்த பாடசாலை நிருவாகம்  வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியது.

இதனையடுத்து மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

100 ரூபாவை திருடிய குற்றத்துக்காக மகனின் கையில் சூடு வைத்த தந்தை: வாழைச்சேனையில் சம்பவம்! | Tamil Leader | We Lead the Nation