Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

இலங்கையில் 10 மாதங்களில் 488 கொலைகள்!

T

The Leader Desk

ஜூலை 28, 2024 • 3:44 AM

இலங்கையில் 10 மாதங்களில் 488 கொலைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன.
  • இவற்றில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூடுகளால் நடந்தவை.
  • தங்காலை, நுகேகொட, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 என அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 7,017 கடுமையான காயங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடம் 2,030 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூடுகளால் நடந்தவை.
 
தங்காலை, நுகேகொட, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 என அதிக எண்ணிக்கையிலான கொலைகள் பதிவாகியுள்ளதாக  அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 7,017 கடுமையான காயங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடம் 2,030 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில், கடந்த ஆறு வருடங்களைக் கருத்தில் கொண்டால், கடந்த ஆண்டுதான் அதிகளவான வீடுகள் உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அந்தக் குற்றங்களில் சுமார் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
 
கடந்த ஆறு ஆண்டுகளில் வீடுகளை உடைத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தீர்ப்பதில் கடந்த ஆண்டு மிகக் குறைந்த சதவீதம் பதிவாகியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
 
இதேவேளை, 2022ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 27சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
 
பெண்களுக்கு  ஏற்படுத்தப்பட்ட கடுமையான காயங்களின் எண்ணிக்கை 154 இல் இருந்து 221 ஆகவும், கத்தி போன்றவற்றால் ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை 74 இல் இருந்து 96 ஆகவும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 21 இல் இருந்து 37 ஆகவும் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
 
கடந்த ஆண்டு, இந்தக் குற்றங்களைத் தீர்ப்பதில் 99 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், குற்றச் செய்திகள் அதிகரித்திருப்பதாகக் கூறும் தணிக்கை அலுவலகம், குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...