Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

கடும் குளிரால் வடக்கில் 250 பசுக்கள் பலி: இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு காற்று மாசு

T

The Leader Desk

டிசம்பர் 9, 2022 • 2:27 PM

கடும் குளிரால் வடக்கில் 250 பசுக்கள் பலி: இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு காற்று மாசு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்றுடன் ஒப்பிடும் போது காற்று மாசு அளவு குறைவாக உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • அவற்றில், கம்பஹாவின் காற்று மாசு அளவு 153 என்ற எல்லையை தாண்டியுள்ளது.
  • சர்வதேச தரவுகளின்படி, 101 மற்றும் 200 க்கு இடையிலான அளவு வளிமண்டலத்தில் மோசமான நிலையை உருவாக்கும்.
  • கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பலாந்தோட்டை ஆகிய நகரங்களில் இதன் அளவு 110 முதல் 131 வரை காணப்பட்டது.
எழுத்து அளவு:

நேற்றுடன் ஒப்பிடும் போது காற்று மாசு அளவு குறைவாக உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபாட்டின் அளவு படிப்படியாக குறைவடைந்தாலும், இன்னும் சில நாட்களுக்கு இது தொடரலாம் என, சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

சர்வதேச காற்று மாசுபாட்டின் படி, இலங்கையில் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவற்றில், கம்பஹாவின் காற்று மாசு அளவு 153 என்ற எல்லையை தாண்டியுள்ளது. சர்வதேச தரவுகளின்படி, 101 மற்றும் 200 க்கு இடையிலான அளவு வளிமண்டலத்தில் மோசமான நிலையை உருவாக்கும்.

கொழும்பு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி மற்றும் அம்பலாந்தோட்டை ஆகிய நகரங்களில் இதன் அளவு 110 முதல் 131 வரை காணப்பட்டது.

தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, ஹம்பாந்தோட்டை, பதுளை, கேகாலை, பத்தரமுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவு உணர்திறன் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது.

நேற்றைய தினத்தைப் போன்று இன்றும் நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிரான காலநிலை காணப்பட்டது. இந்த காற்று மாசுபாடும் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடும் குளிரான காலநிலையை தாங்க முடியாமல் வட மாகாணத்தில் அதிகளவான மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் இவ்வாறு இறந்த மாடுகளின் எண்ணிக்கை 250ஐ நெருங்கியுள்ளது.

இந்த மாவட்டங்களில் பல திறந்த வெளி மாட்டுக் கொட்டகைகள் காணப்படுவதாகவும் அவ்வாறான மாட்டுக் கொட்டகைகளில் இருந்த மாடுகளே இவ்வாறு இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மற்றும் கிளிநொச்சியில் வெப்பநிலை 19 பாகை செல்சியஸ் அளவில் காணப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...