Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ஐ.தே.க, இ.தொ.காவுடன் கூட்டணி இல்லையென வேலுகுமார் அறிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 9, 2022 • 1:43 PM

ஐ.தே.க, இ.தொ.காவுடன் கூட்டணி இல்லையென  வேலுகுமார் அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொள்ளவுள்ளார் என வெளியாகும் தகவல்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (09) நிராகரித்துள்ளார்.
  • ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்றது.
  • இதன்போது வேலுகுமார் எம்.பி நடுநிலை வகித்தார். தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் வழிக்க வர வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்ததாக வேலுகுமார் விளக்கமளித்தார்.
எழுத்து அளவு:

மேற்கொள்ளவுள்ளார் என வெளியாகும் தகவல்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (09) நிராகரித்துள்ளார்.

"மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கான அரசியலையே  மனசாட்சியின் பிரகாரம் இதுவரை நான் முன்னெடுத்துவந்தேன். இனியும் அதே வழியில்தான் என் பயணம் தொடரும்” எனவும் வேலுகுமார் எம்.பி தெரிவித்தார்.

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்றது. இதன்போது வேலுகுமார் எம்.பி நடுநிலை வகித்தார். 

தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் வழிக்க வர வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்ததாக வேலுகுமார் விளக்கமளித்தார்.

எனினும், வேலுகுமாரின் நிலைப்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பலகோணங்களில் கருத்துகள் உலாவின. ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்ல போகின்றார் எனவும் இ.தொ.காவுடன் இணையவுள்ளார் எனவும், இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறப்பட்டது. இந்நிலையிலேயே அத்தகவல்களை வேலுகுமார் எம்.பி. மறுத்துள்ளார். 

அத்துடன், நடுநிலை தொடர்பான தனது நிலைப்பாட்டை திரிபுபடுத்தி, ராஜபக்ச ஆதரவு, ரணில் ஆதரவு, அரசுக்கான ஆதரவு என முத்திரைக் குத்தி, வதந்திகளை பரப்பி,  அரசியல் சேறுபூசும் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும், தனது தவறை மூடி மறைப்பதற்காக இப்படியான அநாகரீக அரசியலை முன்னெடுக்கின்றனர் எனவும் வேலுகுமார் எம்.பி சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...