Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பனிமூட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்…

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 5:13 PM

சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பனிமூட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்…

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பார்க்க முடியாத நாடாக மாறியுள்ளது.
  • நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (08) மதியம் 12 மணியளவில்கூட இருண்ட சூழல் நிலவியது.
  • காற்றின் தரச் சுட்டெண்படி, கொழும்பு காற்றின் தரச் சுட்டெண் 187 அலகுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • காற்றின் தரக் குறியீடு பொதுவாக 150 முதல் 200 அலகுகள் வரை இருந்தால், அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
எழுத்து அளவு:

பார்க்க முடியாத நாடாக மாறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (08) மதியம் 12 மணியளவில்கூட இருண்ட சூழல் நிலவியது. இதுவரை கண்டிராத பனிமூட்டம் வளிமண்டலத்தில் படர்ந்திருந்தது.

காற்றின் தரச் சுட்டெண்படி, கொழும்பு காற்றின் தரச் சுட்டெண் 187 அலகுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமற்ற நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீடு பொதுவாக 150 முதல் 200 அலகுகள் வரை இருந்தால், அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

இந்த திடீர் நிலைமையை எந்த காரணிகள் பாதித்துள்ளன என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்று மாசு முகாமைத்துவ பிரிவின் பிரதான விஞ்ஞானி சரத் பிரேமசிறியிடம் வினவிய போது, "இது இந்தியாவில் காற்று மாசுபாட்டைப் போன்று இலங்கையையும் பாதிப்படையச் செய்துள்ளது. இது இந்தியா வழியாக வீசும் மண்டவுஸ் சூறாவளியின் தாக்கம் மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயு இலங்கையை நோக்கி இழுக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

இலங்கையின் பல பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் வளி மாசு முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கண்டி, குருநாகல், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனை பல்வேறு பகுதிகளில் அவதானித்த மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதிக அளவு காற்று மாசுபாடு ஆபத்தானது என சரத் பிரேமசிறி எச்சரிக்கிறார்.

"இந்த நிலை அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர். எனவே, அத்தகையவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். KN 95 போன்ற முகக்கவசமாயின் சிறந்தது" என்று பிரேமசிறி கூறினார். அத்துடன், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்” என்று அவர் வலியுறுத்தினார்.

பெருமளவில், நாளை வெள்ளிக்கிழமைக்குள் (09) வளிமண்டலம் சரியாகிவிடும் என்று தெரிவித்த அவர், "இந்தியாவை நோக்கி செல்லும் சூறாவளியால் இலங்கை பாதிக்கப்படாது. காற்று குறைந்த பிறகு, இலங்கையில் மாசுபட்ட காற்று குறையும்" என்றார்.

தற்போது, ​​இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று மாசு உள்ளது.

புதுடெல்லியில் காற்றின் தரக் குறியீடு 387 அலகுகளாக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் அறுவடைக்குப் பின் அப்புறப்படுத்தப்படும் தாவர பாகங்களை எரிப்பதாலும், வாகனங்கள் வெளியிடும் புகைகளாலும் ஒவ்வொரு ஆண்டும் இந்நிலைமை மோசமாகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பனிமூட்டம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்… | Tamil Leader | We Lead the Nation