Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

ரணிலின் பாதீடு நிறைவேற்றம்: துமிந்த, சுதர்ஷனி இணைவு: வேலுகுமார் இடைநீக்கம்

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 3:50 PM

ரணிலின் பாதீடு நிறைவேற்றம்: துமிந்த, சுதர்ஷனி இணைவு: வேலுகுமார் இடைநீக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று (08) நாடாளுமன்றத்தில் 43 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன.
  • நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (08) பகல் முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி அமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

இன்று (08) நாடாளுமன்றத்தில் 43 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் கிடைத்தன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேலுகுமார் எம்.பி.க்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

நிதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று (08) பகல் முழுவதும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் மாலை 6.50 மணியளவில் நிறைவடைந்து அதன் பின்னர் இறுதி வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதி அமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.

அங்கு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 எம்.பிக்களும் எதிராக 84 எம்.பிக்களும் வாக்களித்தனர். இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பில் கட்சியின் கொள்கைகளை மீறிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை, அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக, தமுகூ அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமைக்குழு சார்பாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கை வெளியிட்டு அவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

“அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்படுகிறார். அத்துடன், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சியின் அரசியல் குழு எடுக்கும்” என்று, மனோ எம்.பி தனதறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...