Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

எச்சரிக்கை! இந்தியாவின் வளி மாசு இலங்கையையும் ஆட்கொண்டது

T

The Leader Desk

டிசம்பர் 8, 2022 • 12:05 PM

எச்சரிக்கை! இந்தியாவின் வளி மாசு இலங்கையையும் ஆட்கொண்டது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவில் இருந்து தூசித் துகள்கள் அதிகளவில் வந்து, இலங்கை வளிமண்டலம் மாசடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
  • கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்கள் இந்நிலைமை அதிகரித்துள்ளதுடன், வளிமண்டல அளவீட்டுத் தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் வளிமண்டலத் துகள்களின் அளவு 200 அலகுகளாகவும் கொழும்பு மாவட்டத்தில் துகள்களின் அளவு 167 அலகுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதனால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
  • தற்போது இந்த நாட்டைப் பாதித்துள்ள புயல், நாளைய (9) தினத்துக்குள் இந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளின் கரைகளைக் கடக்க உள்ளதாகவும் அதன் பின்னர் புழுதி நிலை படிப்படியாகக் குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்தியாவில் இருந்து தூசித் துகள்கள் அதிகளவில் வந்து, இலங்கை வளிமண்டலம் மாசடைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் இருண்ட இயற்கை மற்றும் பனிமூட்டமான இயல்புக்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற மாவட்டங்கள் இந்நிலைமை அதிகரித்துள்ளதுடன், வளிமண்டல அளவீட்டுத் தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் வளிமண்டலத் துகள்களின் அளவு 200 அலகுகளாகவும் கொழும்பு மாவட்டத்தில் துகள்களின் அளவு 167 அலகுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த நாட்டைப் பாதித்துள்ள புயல், நாளைய (9) தினத்துக்குள் இந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா ஆகிய பகுதிகளின் கரைகளைக் கடக்க உள்ளதாகவும் அதன் பின்னர் புழுதி நிலை படிப்படியாகக் குறைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்களில் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம் என்றும் இந்த தூசித் துகள்கள் உடலுக்குள் சென்று சுவாச நோய்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை முடிந்தவரை மூடி வைப்பதும் முக்கியம் எனவும் வெளியில் செல்வதை முடிந்தளவு குறைத்துக்கொள்ள  வேண்டும் எனவும் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எச்சரிக்கை! இந்தியாவின் வளி மாசு இலங்கையையும் ஆட்கொண்டது | Tamil Leader | We Lead the Nation