Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

மனித உரிமைகள் தினத்தன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

T

The Leader Desk

டிசம்பர் 7, 2022 • 10:17 AM

மனித உரிமைகள் தினத்தன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னெடுக்கவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
  • குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ளனர்.
எழுத்து அளவு:

முன்னெடுக்கவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேரணியினை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை அமைப்புகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இணைந்து வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்படி கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு கல்லடி பாலத்திலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு காந்தி பூங்காவிலே முடிவடையவுள்ளது.

அதேபோன்று வடக்கிலே அனைத்து மாவட்டங்களையும், உள்ளடக்கியதாக வவுனியா கந்தசுவாமி கோவிலிலே பேரணி ஆரம்பிக்கப்பட்டு பஜார் வீதியினூடாக பழையபேருந்து நிலையத்தில் முடிவடைகின்றது.

இப்பேரணிக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், வர்த்தகர்கள், தமிழ் தேசியத்தினை நேசிக்கும் அரசியல்கட்சிகள், பல்கலைக்கழ மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலகர்கள், கலந்துகொண்டு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...