Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

3 வருடங்களில் 32 அரச காணிகள் வடக்கில் படைகளுக்கு கையளிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 7, 2022 • 4:37 AM

3 வருடங்களில் 32 அரச காணிகள் வடக்கில் படைகளுக்கு கையளிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெரியாமல், சத்தம் சந்தடியின்றி தற்போதைய ஆளுநராலும் அதற்கு முன்னாள் பதவிலியிருந்த ஆளுநராலும் படையினரின் பயன்பாட்டக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
  • இருப்பினும், அரச காணிகள் இரகசியமான முறையில், வெளியில் ஆரவாரமில்லாமல், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு, பிரதேச செயலாளர்களிடம் இருந்த உரிமை பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • அவ்வாறு உரிமை மாற்றம் செய்யப்பட்ட விவரங்களுக்கமைய 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுக் காணப்பகுதியில் மாத்திரம் 32 அரச காணிகள் பாதுகாப்பு அமைச்சிடம் ஆளுநர்களால் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
  • இதற்கமைய, வடக்கில் 32 படைமுகாம்களுக்குமாக 22 ஹெக்டெயார் அல்லது 54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தெரியாமல், சத்தம் சந்தடியின்றி தற்போதைய ஆளுநராலும் அதற்கு முன்னாள் பதவிலியிருந்த ஆளுநராலும் படையினரின் பயன்பாட்டக்குக் கையளிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள், தனியார் காணிகளாகவும் அரச காணி மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமானதாகவும் காணப்படுகின்றன.

இவ்வாறு படைமுகாம் காணப்படும் நிலங்களைத் தமக்கே வழங்குமாறு படையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவற்றில் தனியார் நிலங்களின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அதேநேரம், தமது நிலம் தமக்கு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரச காணிகள் அந்தந்தப் பிரதேசப் பொதுப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.

இருப்பினும், அரச காணிகள் இரகசியமான முறையில், வெளியில் ஆரவாரமில்லாமல், அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு, பிரதேச செயலாளர்களிடம் இருந்த உரிமை பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு உரிமை மாற்றம் செய்யப்பட்ட விவரங்களுக்கமைய 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுக் காணப்பகுதியில் மாத்திரம் 32 அரச காணிகள் பாதுகாப்பு அமைச்சிடம் ஆளுநர்களால் கையளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள இராணுவம், கடற்படை, விமானப்படையினர் நிலைகொண்டுள்ள இடங்கள் பலவே அவர்களுக்கென நிரந்ரமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வடக்கில் 32 படைமுகாம்களுக்குமாக 22 ஹெக்டெயார் அல்லது 54 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. படையினர் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட இந்த 32 இடங்களில் ஒரேயோர் இடம் விமானப் படையினரின் பயன்பாட்டுக்காக கேப்பாபுலவில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...