Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

வடக்கு ஆளுநரின் சட்டத்தை ரத்து செய்தார் ஜனாதிபதி

T

The Leader Desk

டிசம்பர் 6, 2022 • 3:43 AM

வடக்கு ஆளுநரின் சட்டத்தை ரத்து செய்தார் ஜனாதிபதி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.
  • இந்த விடயம் தொடர்பில், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டிய போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர் மூலம் மேற்கொள்ளலாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
  • அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாகத் தனிநபர் ஒருவர் நியதிச் சட்டங்களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
எழுத்து அளவு:

வர்த்தமானி மூலம் அறிவித்த விடயங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தெரியவருகிறது.

அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணாகத் தனிநபர் ஒருவர் நியதிச் சட்டங்களை ஆக்கி அறிவிக்கும் விதத்தில் வடக்கு ஆளுநரால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில், கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சுட்டிக்காட்டிய போது, அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் நடவடிக்கையை நீதி அமைச்சர் மூலம் மேற்கொள்ளலாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும், அன்றைய தினம் நீதி அமைச்சர் அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. வெளிநாட்டில் இருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினமும் மேற்படி விவகாரம் சூடுபிடித்த நிலையில், அந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வடக்கு ஆளுநரின் சட்டத்தை ரத்து செய்தார் ஜனாதிபதி | Tamil Leader | We Lead the Nation