Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

வட, கிழக்கு உட்பட 8 மாவட்டங்களின் விவசாயத்துக்கு அமெரிக்காவிடமிருந்து உரம்

T

The Leader Desk

டிசம்பர் 5, 2022 • 11:19 AM

வட, கிழக்கு உட்பட 8 மாவட்டங்களின் விவசாயத்துக்கு அமெரிக்காவிடமிருந்து உரம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 று நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 9,300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை அமெரிக்கா இன்று (05) உத்தியோகபூர்வமாக விவசாய அமைச்சிடம் கையளித்தது.
  • “இலங்கையின் அனைத்துத் தேவைகளையும் உரம் வழங்குவது மாத்திரம் பூர்த்தி செய்யாது என்பதை நான் அறிவேன்.
  • ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டில் சிறு வணிகங்களுக்கான புதிய உதவி மற்றும் மேலதிகக் கடன்கள் வடிவில் 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அறிவித்துள்ளோம்.
எழுத்து அளவு:

மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 று நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 9,300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை அமெரிக்கா இன்று (05) உத்தியோகபூர்வமாக விவசாய அமைச்சிடம் கையளித்தது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதி உதவியுடன் FAOஇனால் கொள்வனவு செய்யப்பட்ட இந்த உரமானது USAIDஇனால் ஆதரவளிக்கப்படும் உர உதவியின் முதலாவது தொகுதியாகும். நாடு முழுவதுமுள்ள ஒரு மில்லியன் விவசாயிகளைச் சென்றடையக்கூடிய மேலதிக உரத் தொகுதிகள் எதிர்வரும் மாதங்களில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்க மக்களால் வழங்கப்படும் இந்த உரமானது எதிர்வரும் மாதங்களில் எண்ணற்ற இலங்கைக் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்கு உதவி செய்யும்” என்று, கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த உரத்தினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

“இலங்கையின் அனைத்துத் தேவைகளையும் உரம் வழங்குவது மாத்திரம் பூர்த்தி செய்யாது என்பதை நான் அறிவேன். எனினும் இவ்வுதவியானது இச்சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்கா வழங்கும் மிகப் பெரிய முதலீடு மற்றும் ஆதரவின் ஓர் அம்சமாகும். ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டில் சிறு வணிகங்களுக்கான புதிய உதவி மற்றும் மேலதிகக் கடன்கள் வடிவில் 240 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை நாங்கள் அறிவித்துள்ளோம். தொடர்ந்தும் அதை மேற்கொள்வோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...