Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?

T

The Leader Desk

டிசம்பர் 5, 2022 • 10:55 AM

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
  • தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.
எழுத்து அளவு:

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் தற்போது ஓரளவிற்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக தான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில், தன்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆராஜக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனரா எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? | Tamil Leader | We Lead the Nation