Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

மிக மோசமான பெருந்தோட்ட நிர்வாகியாக இருக்கும் எம்.பி தொடர்பில் தகவல் கசிவு

T

The Leader Desk

டிசம்பர் 5, 2022 • 8:21 AM

மிக மோசமான பெருந்தோட்ட நிர்வாகியாக இருக்கும் எம்.பி தொடர்பில் தகவல் கசிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கம்பனியொன்றின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
  • “10 மாவட்டங்களில் காணப்படும் பெருந்தோட்டக் கம்பனிகள், நான்கைந்து தோட்ட உரிமையாளர்கள் வசமே காணப்படுகின்றன.
  • பலாங்கொடை மற்றும் மடோல்சீமை பெருந்தோட்டக் கம்பனிகள் ஹரி ஜயவர்தனவுக்கும் ஹேலீஸ், ஹொரண, தலவாக்கலை, களனி போன்ற பெருந்தோட்டக் கம்பனிகள் தம்மிக்க பெரேரா வசமும் இருக்கின்றன.
  • பாலியல் வன்கொடுமை “பெருந்தோட்டத் தொழிலாளர்களில் 75 சதவீதமானோர் பெண்களாகக் காணப்படுகின்றனர்.
எழுத்து அளவு:

கம்பனியொன்றின் உரிமையாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், தொழிலாளர் சட்டம், வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நாள் சம்பளம் போன்றன தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே தோட்டக் கம்பனிகள் செயற்பட்டு வருகின்றன. அவர்களில் தம்மிக பெரேரா எம்.பியே முன்னணி வகிக்கிறார். ஹேலீஸ் பெருந்தோட்டக் கம்பனி அவருக்குச் சொந்தமாக் காணப்படுகின்றது” என, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுரேஸ் எம்.பி தெரிவிக்கையில், தம்மிக்க பெரேரா மற்றும் ஹரி ஜயவர்தன போன்ற பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்கள், தொழில் சட்டங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்வதில்லை என்று குறிப்பிட்டார்.

“நாட்டுக்கு டொலர்களை அள்ளிக்கொண்டு வருவேன் என்று கூறி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த தம்மிக்க பெரேரா எம்.பி, அவருக்குக் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலும் தெரியாதுள்ளார். குறைந்தபட்சம் அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கூட வழங்கவில்லை.

“10 மாவட்டங்களில் காணப்படும் பெருந்தோட்டக் கம்பனிகள், நான்கைந்து தோட்ட உரிமையாளர்கள் வசமே காணப்படுகின்றன. அரசாங்கத்தை விட அதிக அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. பலாங்கொடை மற்றும் மடோல்சீமை பெருந்தோட்டக் கம்பனிகள் ஹரி ஜயவர்தனவுக்கும் ஹேலீஸ், ஹொரண, தலவாக்கலை, களனி போன்ற பெருந்தோட்டக் கம்பனிகள் தம்மிக்க பெரேரா வசமும் இருக்கின்றன.

பாலியல் வன்கொடுமை

“பெருந்தோட்டத் தொழிலாளர்களில் 75 சதவீதமானோர் பெண்களாகக் காணப்படுகின்றனர். அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கருதாத தோட்டக் கம்பனி உரிமையாளர்களால், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், பெண்ணுரிமைகள் மற்றும் மனித உரிமைகள் போன்றனவும் மீறப்படுகின்றன” என்று குற்றஞ்சாட்டிய வடிவேல் சுரேஸ் எம்.பி, தொழிலிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் தொடர்பில் உலகத் தொழிற்சங்கம் அறிமுகப்படுத்தியுள்ள “C 190” திட்டத்தை தோட்டங்களில் நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

“வடக்கு, கிழக்கைப் போன்று பெருந்தோட்டங்களிலும் பெருமளவு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அந்தப் பிரச்சினைகள் வெளிவராமல் இருப்பதற்குக் காரணம் பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் மீது அன்பு கொண்டிருப்பதேயாகும். இருப்பினும், கம்பனி உரிமையாளர்கள் அந்தத் தொழிலாளர்கள் தொடர்பில் கவனிப்பதில்லை.

“தமிழீழ விடுதலைப் புலிகள் பெருந்தோட்டங்களுக்குள் நுழைய தொழிற்சங்கங்கள் இடமளிக்கவில்லை. நாம் அவர்களைத் தடுத்து நிறுத்திக்கொண்டோம். எல்லா நாட்களும் பணியாற்றுகின்றோம். கொரோனாவை காரணங்காட்டி தோட்டத் தொழிலுக்குச் செல்லாமல் இருக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு மாற்றாந்தாய் மரியாதையே கிடைக்கிறது” என்று, வடிவேல் சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...