Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

“முதலில் தீர்வு அடங்கிய அரசமைப்பு வரட்டும் பின்பே உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு”

T

The Leader Desk

டிசம்பர் 5, 2022 • 4:57 AM

“முதலில் தீர்வு அடங்கிய அரசமைப்பு வரட்டும் பின்பே உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு”   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனித்தனியாக பேச்சுக்காளை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
  • ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரம் 12அம் திகதிக்குப் பின்னர் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
  • அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுடன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.
எழுத்து அளவு:

தனித்தனியாக பேச்சுக்காளை முன்னெடுப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு பிரயத்தனம் செய்துவரும் நிலையில், தென்னாபிரிக்காவில் இடம்பெற்றது போன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பீர்த்தி செய்யும் வகையில் புதிய அரசமைப்பின் ஊடாக நிரந்தரத் தீர்வு காணப்பட்டதன் பின்னரே ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினாரர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரம் 12அம் திகதிக்குப் பின்னர் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்த முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். இந்த அழைப்பு தொடர்பில் ஏற்கெனவே தமிழ்த் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் கூடிப் பேசிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

அதேநேரம், இலங்கையில் உள்ள இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைக் களைவதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுடன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார்.

தொடர்ந்து, தென்னாபிரிக்காவின் துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றுடன் வெளிளிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார். அதனையடுத்து, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவும் குறித்த நிபுணர்கள் குழுவினரைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் சுமந்திரனும் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...