Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

பாடசாலைகளைக் காவுகொண்ட “ஐஸ்” அசுரன்! எஸ்டிஎஃப் பணிகள் ஆரம்பம்

T

The Leader Desk

டிசம்பர் 4, 2022 • 3:56 PM

பாடசாலைகளைக் காவுகொண்ட “ஐஸ்” அசுரன்!  எஸ்டிஎஃப் பணிகள் ஆரம்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்டிஎஃப்) ஆரம்பித்துள்ளனர்.
  • பாடசாலைக் கட்டமைப்பில் தரம் 8 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களில் சிலரும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த சில இளைஞர் யுவதிகளும் இந்த போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று, தேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • சில மதஸ்தலங்களைச் சேர்ந்த மதகுருமார்கள், சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிலரும் இந்த ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (எஸ்டிஎஃப்) ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலைக் கட்டமைப்பில் தரம் 8 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களில் சிலரும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களைச் சேர்ந்த சில இளைஞர் யுவதிகளும் இந்த போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று, தேசிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் தூக்கமின்றி கண் விழித்து இரவு முழுவதும் கல்வி கற்க முடியுமென்று பரப்பப்பட்டு வரும் வதந்தியே இந்தப் போதைப்பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்திருக்கக் காரணமென்று புலனாய்வுப் பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என்றும் இதற்காக மாணவர்களுக்கு கடனாக போதைப்பொருளை வழங்கும் போதைப்பொருள் வியாபாரிகள், அம்மாணவர்கள் அதற்கு அடிமையான பின்னர் அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

சில மதஸ்தலங்களைச் சேர்ந்த மதகுருமார்கள், சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிலரும் இந்த ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் வியாபித்து வரும் இந்தப் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...