Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட 32 தமிழர்களின் நினைவுதினம்

T

The Leader Desk

டிசம்பர் 3, 2022 • 5:46 AM

படுகொலை செய்யப்பட்ட 32 தமிழர்களின் நினைவுதினம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நினைவு தினம், முல்லைத்தீவு ஓதியமலை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
  • மேற்படி 32 பேரும், ஓதியமலை கிராமிய அபிவிருத்தி மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில், 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 02அம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.
  • ஒதியமலை சமூகப் படுகொலையானது, 1984ஆம் ஆண்டு டிசெம்பர் ஆரம்பம் முதல் இரண்டு வாரங்களில் முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப்பகுதி தமிழ்க் கிராமங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சமூகப் படுகொலைகளில் ஒன்றாகும்.
  • கொக்கிளாய், தென்மரவாடி, அமரவயல், கொக்குத்தொடுவாய், அளம்பில், நாயாறு, குமிழமுனை மற்றும் மணலாறு தாக்குதல்களுடன் கூடிய தாக்குதல் கிராமமாகவே இது காணப்படுகிறது.
எழுத்து அளவு:

நினைவு தினம், முல்லைத்தீவு ஓதியமலை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி 32 பேரும், ஓதியமலை கிராமிய அபிவிருத்தி மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில், 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 02அம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், அவர்களின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், அக்கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் விசேட பூஜையும் நடத்தப்பட்டதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒதியமலை சமூகப் படுகொலையானது, 1984ஆம் ஆண்டு டிசெம்பர் ஆரம்பம் முதல் இரண்டு வாரங்களில் முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப்பகுதி தமிழ்க் கிராமங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சமூகப் படுகொலைகளில் ஒன்றாகும்.

கொக்கிளாய், தென்மரவாடி, அமரவயல், கொக்குத்தொடுவாய், அளம்பில், நாயாறு, குமிழமுனை மற்றும் மணலாறு தாக்குதல்களுடன் கூடிய தாக்குதல் கிராமமாகவே இது காணப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் சிங்களக் குடியேற்றமே என்று அப்போதைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தங்களுடைய சொந்தக் கிராமங்களை விட்டுச் சென்ற மக்களை மீளக்குடியேற்றவே அல்லது இழந்த உயிர்களுக்கு நியாயமோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று, ஓதியமலை நினைவுதினத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குக் கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்டவர் பிற்காலத்தில் மேஜர் ஜெனரல் பதவிநிலை வகிக்கும் அப்போதைய பிரிகேடியர் ஜானக்க பெரேரா ஆவார்.

இந்தத் தாக்குதலின் பின்னர் உருவாக்கபட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜானக்கபுரய என்றும் பெயரிடப்பட்டது.

வடமத்திய மாகாண முதல்வராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா, அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...