Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

போதைப்பொருள், குற்றச்செயல்களை ஒழிக்கும் பொறுப்பு எஸ்.டி.எஃப்க்கு

T

The Leader Desk

டிசம்பர் 2, 2022 • 5:08 AM

போதைப்பொருள், குற்றச்செயல்களை ஒழிக்கும் பொறுப்பு எஸ்.டி.எஃப்க்கு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் விசேட படையணியொன்றை உருவாக்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.
  • வருடாந்தம் இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருளின் அளவு 1,100 முதல் 2,000 கிலோகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்த போதைப்பொருள், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பொலிஸ் விசேட படையணியொன்றை உருவாக்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அவதானம் செலுத்தியுள்ளார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களிடையேயும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்று, கொழும்பில் நேற்று (01) ஊடகச் சந்திப்பொன்றை நடத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

அதனால், ஏனைய அனைத்துப் பணிகளிலிருந்தம் விசேட பொலிஸ் படையணியை விடுவித்து, போதைப்பொருள் மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பொறுப்பை மாத்திரம் கையளிக்க எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வருடாந்தம் இலங்கையில் கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருளின் அளவு 1,100 முதல் 2,000 கிலோகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தவிர, ஏனைய வகை போதைப்பொருட்களையும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றும் திட்டமிடப்பட்ட வகையில் குற்றவாளிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்ட அவர், அதற்கான ஆலோசனைகளும் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், கலைஞர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து, போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...