Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

சாணக்கியனுக்கு சீனா பதிலடி

T

The Leader Desk

டிசம்பர் 1, 2022 • 2:30 PM

சாணக்கியனுக்கு சீனா பதிலடி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை நாம் ஊக்குவித்து வருகின்றோம்” என்று சீனா பதிலளித்துள்ளது.
  • தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து சீனத் தூதரகம் விடுத்திருந்த அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்றத்தில் நேற்று (30) உரையாற்றிய சாணக்கியன் எம்.பி சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்லவென்று தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையிலேயே, சாணக்கியன் எம்.பிக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகத்தினால் இந்த அறிக்கை இன்று (01) வெளியிட்டிருக்கிறது.
எழுத்து அளவு:

இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி அமைப்புகளை நாம் ஊக்குவித்து வருகின்றோம்” என்று சீனா பதிலளித்துள்ளது.

“சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான பங்குதாரர் என்ற வகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை உடனடியாக இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சீனா ஊக்குவித்து வருகின்றது” என்று, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

நாட்டின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியில் இலங்கையின் அனைத்துக் கடன் வழங்குநர்களின் கூட்டங்களிலும் சீனா தீவிரமாகப் பங்கேற்றது என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவின் நிதி நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் மாதம் நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியைத் தாமதமின்றி தொடர்பு கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ள தூதரகம், பல்வேறு வங்கிகளின் பணிக் குழுக்கள் நாட்டுக்குப் பயணம் செய்து, வருகின்றன என்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்து சீனத் தூதரகம் விடுத்திருந்த அறிக்கையிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (30) உரையாற்றிய சாணக்கியன் எம்.பி சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்லவென்று தெரிவித்திருந்தார்.

உண்மையான நண்பராக இருந்தால், சர்வதேச நாணய நிதியக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா ஏன் உதவவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே, சாணக்கியன் எம்.பிக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகத்தினால் இந்த அறிக்கை இன்று (01) வெளியிட்டிருக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...