Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இலங்கை அணிக்கு சாதனை வெற்றி

T

The Leader Desk

டிசம்பர் 1, 2022 • 9:16 AM

இலங்கை அணிக்கு சாதனை வெற்றி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்ற அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நேற்று (30) முடிவடைந்தது.
  • மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளுடன் வெற்றியை ஈட்டிய நிலையிலேயே இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
  • அதன்படி, ஆப்கானிஸ்தானுக்குரிய 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது.
  • ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார்.
எழுத்து அளவு:

1 – 1 என்ற அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி நேற்று (30) முடிவடைந்தது.

மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளுடன் வெற்றியை ஈட்டிய நிலையிலேயே இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போதான நாணய சுழற்சியில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தானுக்குரிய 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 313 ஓட்டங்களைக் குவித்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார். இதுவே, ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஒரு நாள் போட்டியில் குவித்த அதிகப்படியான ஓட்டங்களாகும்.

314 ஓட்டங்களை இலக்கு வைத்து களத்தில் இறங்கிய இலங்கை அணி, 48 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த நிலையில் 314 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

வெற்றிகரமான துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்த பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர், முதல் விக்கெட் இழப்புக்குள் 101 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.

குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 33 ஓட்டங்களையும் குவித்தனர்.

போட்டி நடைபெற்ற பல்லேகல சர்வதேச மைதானத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகப்படியான ஓட்டங்கள் இதுவேயாகும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், இலங்கை அணியினர் 296 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...