Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

MTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு!

T

The Leader Desk

ஜனவரி 13, 2021 • 2:32 PM

MTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்கிணங்க, மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெலவினால் இலக்கம் – 01 நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • இந்த வழக்கு கடந்த 08 ஆம் திகதி மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • இந்த ​கோரிக்கையை MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கடுமையாக ஆட்சேபித்தார்.
எழுத்து அளவு:

இதற்கிணங்க, மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெலவினால் இலக்கம் – 01 நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 08 ஆம் திகதி மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதானகேவிற்கு இந்த வழக்கை மாற்றுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ​கோரிக்கை விடுத்ததுடன், ஆரம்பத்தில் ஒருதலைப்பட்ச தடையுத்தரவு அவரினால் பிறப்பிக்கப்பட்டமை மற்றும் கடந்த மாதம் 07 ஆம் திகதி அவரினால் தடையுத்தரவு நீடிக்கப்பட்டமை ஆகிய விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த ​கோரிக்கையை MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கடுமையாக ஆட்சேபித்தார்.
வழக்கு தரப்பினருக்கு தேவையான விதத்தில், சிந்தனைக்குப் புலப்படும் வகையில், வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதிகளை தெரிவு செய்வது மிகவும் தவறான முன்னுதாரணம் எனவும் அதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...