சோதனையை முன்னெடுத்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் (ASP) வீட்டின் முன்னால் வைப்பதற்காக ஒப்பந்தம் எடுத்த கூலிப்படை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த கடற்பரப்பில் வைத்து சுமார் 350 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த பிரிவின் முன்னாள் பணிப்பாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவிற்கு (ASP Rohan Olugala) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், 7 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளின் படி, இந்தக் கடத்தலின் பின்னணியில் துபாயில் தலைமறைவாக இருக்கும் பிரபல போதைப்பொருள் வியாபாரியான 'அங்கொட பிரியந்த' என்பவர் செயற்பட்டமை தெரியவந்தது.
தனது பாரிய போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த அங்கொட பிரியந்த, பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய ஒற்றன் யார் என்பதைக் கண்டறிந்துள்ளார்.
அவரைப் படுகொலை செய்து, அவரது தலையை வெட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்னால் வைக்குமாறு பாதாள உலகக் குழுவொன்றுக்கு அவர் ஒப்பந்தம் (Contract) வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், பாதாள உலகக் குழுவினர் தன்னைத் தேடுவதை அறிந்த ஒற்றன் தனது வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார். இது குறித்த தகவல் மேல் மாகாண வட பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவிற்கு கிடைக்கப்பெற்றது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் கொலை ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


