1200 x 80 DMirror

 
 

“காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 4 ஆயிரத்து 795 முறைப்பாடுகள்

தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

“இந்த முறைப்பாடுகள் தொடர்பான சகல விசாரணைகளையும் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்துஉறுதியானதீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என்றும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர், காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மேலும் கூறுகையில்,

“காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்போது வினைத்திறனாக்கப்பட்டுள்ளன. அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 62 முறைப்பாடுகள் தொடர்பில் மாத்திரமே கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

“ஆனால், புதிய நிர்வாகக் கட்டமைப்புடன் 4 ஆயிரத்து 795 முறைப்பாடுகள் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“அடுத்த ஆண்டுக்குள் அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து ஒரு தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி