நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட

நாடாளுமன்றத் தடை தொடர்பான தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளனர். இதன்படி, 56 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யும் பிரேரணை சபாநாயகரால் இன்று (02) முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரையின் பேரில் மூன்று எம்.பி.க்களும் தடை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், அந்த பரிந்துரைகளுக்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதனால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி