Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிகிச்சையின்றி 95 இலங்கையர்கள் மரணம்!

T

The Leader Desk

நவம்பர் 12, 2020 • 2:55 PM

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிகிச்சையின்றி 95 இலங்கையர்கள் மரணம்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாடு சென்ற இலங்கையர்களில் இதுவரை 95 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் கூறுகின்றன.
  • இலங்கையின் தேசிய வருமானத்தில் வருடாந்தம் 7 பில்லியனுக்கு அதிகமான வருமானத்தை தேடித் தரும் வெளிநாட்டுப் பணியாளர்களை.
  • இப்போது கூட அவ்வாறு வரவழைக்கப்படும் இலங்கையரிடமிருந்து லட்சக் கணக்கில் அறவிடுவது விமானங்களில் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காவே எனக் கூறப்படுகிறது.
  • இதுவரை 1600 கோடிக்கும் மேற்பட்ட தொகை நிதியத்திற்கு சேர்ந்துள்ளது.
எழுத்து அளவு:

வெளிநாடு சென்ற இலங்கையர்களில் இதுவரை 95 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் மத்தியக் கிழக்கு நாடுகளில் முறையான சிகிச்சையின்றியும் பராமரிப்பின்றியும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடவசதி இல்லையெனக் கூறி, நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் இப்படி கவனிப்பாரற்று விடப்படுவதனால் கொரோனா நோய் மற்றும் மாரடைப்பு போன்றவற்றால் அல்லல்பட்டு இறப்பவர்கள் சம்பந்தமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இலங்கையின் தேசிய வருமானத்தில் வருடாந்தம் 7 பில்லியனுக்கு அதிகமான வருமானத்தை தேடித் தரும் வெளிநாட்டுப் பணியாளர்களை. விசேடமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் பணியாற்றும் வீட்டுப் பணிப்பெண்களை இந்நாட்டிற்கு வரவழைக்காமை சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் அரசாங்கத்தின் முன்பாக அழுது புலம்பிய போதிலும், அவர்களை ‘வெளிநாட்டு வீரர்’ என முத்திரை குத்தினார்களேயன்றி அவர்களி கண்ணீரைத் துடைக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் முன்வரவில்லை என்பதுதான் பிரச்சினை.

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்களை, அரேபிய நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு அனுப்பப்படும் ‘தற்கொலைக் குண்டுகள்” என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியது, இந்த இலங்கையர்களை இந்நாட்டிற்கு அழைத்து வருவதில் ஏற்படும் செலவீனத்தை குறைப்பதற்குத்தான். இப்போது கூட அவ்வாறு வரவழைக்கப்படும் இலங்கையரிடமிருந்து லட்சக் கணக்கில் அறவிடுவது விமானங்களில் சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காவே எனக் கூறப்படுகிறது.

அவ்வாறு வரவழைப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக நிலையங்கள் இல்லையென காரணம் கூறப்படுகிறது. தொற்று நோய் காலத்தில் கொரோனா நிதியம் போன்றவற்றிற்கு பெருமளவு நிதி சேர்ந்தாலும், வெளிநாட்டு செலாவணியை பெற்றுத் தரும் இலங்கையர்களுக்காக அந்த நிதியிலிருந்து எந்தப் பணமும் ஒதுக்கப்படவில்லை. இதுவரை 1600 கோடிக்கும் மேற்பட்ட தொகை நிதியத்திற்கு சேர்ந்துள்ளது. அதிலிருந்து 400 கோடி மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...